மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி இயக்குநரின் செயல் முறைக்கேற்ப மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வரின் வழிகாட்டுதல் படி ஸ்காட் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அக்டோபர் 05.10.2017 மற்றும் 06.10.2017 ஆகிய இரண்டு நாள் சாரண சாரணியர் பயிற்சி முகாம் நடைபெற்றது. திரு.ராமசாமி (Dist. Commissioner, Nagercoil)இ திரு.பிரான்சிஸ் அலாய் (Dist. Trg Commissioner, Nagercoil) ஆகிய இருவரும் ; சாரண சாரணியர் முக்கியத்துவத்தையும் முதலுதவி சிகிச்சை குறித்தும், முடிச்சு போடுதல் போன்ற பயிற்சிகளையும் மாணவ மாணவிகளுக்கு செய்து காண்பித்தனர். பேடன் பவுல் பற்றிய அரிய காணொலி தொகுப்பு மாணவ மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது. முதல்வர் சாரண சாரணியர் இயக்கம் பற்றி சிறப்புரையாற்றினார். அனைத்து ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.